உணர்வுகள் சிறுகதை – 3

“கேட்டியா அன்னிக்கி get togetherருன்னு 4 ஃபேமிலி வீட்டுக்கு வந்திருந்திச்சிவே. வந்தவங்களையெல்லாம் வீட்டை விட்டு வெளிய போன்னு என் பையன் சொன்னான். இதை கேட்ட எப்படியிருக்கும்வே ஒனக்கு”

“அவனுக்கு மூன்றை வயசு தான் ஆவுது. எ.. அவனை சொல்லி தப்பில்லவே. எப்பவுமே நாலு செவுத்துக்குள்ள அவன் அம்மே கூடவே இருக்கம்ல அதாண்டே. வாரக்கடைசின்னா பார்க்கு மாலுன்னு கூட்டுப்போவோம். அப்பறம் நாங்க வாரத்துக்கு ஒரு வீட்டுக்கு போய் திம்போம்ல. அவங்க நாலு பேரும் ஒரு வாரக்கடசி எங்க வீட்டுக்கு வந்து தின்பவுல. மொத்தமே வெளியுலக அவனுக்கு அவ்வளவுதாம்லே”

“எ… புள்ள இப்படியே தனியாவே யார் கூடவும் ஒண்டாம வளர்றம்ல அதுனால யாரையும் அண்ட விடமாட்டாங்கிறாம்ல.இப்பிடியிருந்தா ஊருக்கு போய் அமெரிக்கல வளர்ற புள்ளன்னு சொல்லிக்கிட முடியுமா?”

“அன்னிக்கு வந்த ஃபேமிலில ஒரு சின்ன பொண்ணுடே. அவ அம்மே சொல்லிட்டான்னு பில்லா ஸ்டைல் பண்ணுதுடே. சிவாஜி பாட்டு பாடுடே. என் புள்ள இருக்கன்ல ரூம்லே போய் தனியா உட்கார்ந்திட்டாம்வே. வெள்ளக்கார புள்ள எல்லாம் என்னா ஆட்டம் ஆடுதுடே. கேட்டா.. அவங்க ஆத்தா அம்மா புள்ளய 5 அல்லது 6 மாசத்துல Daycare -ல உட்டுட்டு வேலைக்கு போயிரும்டே. புள்ள அப்பன் ஆத்தாவை விட்டு வெளியே தாண்டே ஜாஸ்தி வளருது. நாம அப்படியா? புள்ளய நாலு சொவுத்துக்குள்ள பொத்தி பொத்தி வளக்குறோம்ல”

“எல்லாத்தையும் வீட்டை விட்டுப்போக சொல்லு வீட்டை விட்டுப்போக சொல்லுன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாம்லே.எ… கேட்டியா… புள்ளைய நான் அடிக்கிறது கிடையாது. அவன் அம்மே கண்டிச்சா நான் கண்டிக்க கூடாது. நான் கண்டிச்சாஅவன் அம்மே கண்டிக்க கூடாது. இது எனக்கு எம் பொண்டாட்டிக்கும் உள்ள அக்ரிமெண்டுடே.”

“ரூமுக்குள்ள போயி தூங்க வைக்கிறென்னு என் பொண்டாட்டி தூக்கிட்டு போன அவன. அவன் அப்பாவையும் வரச்சொல்லுன்னு சொல்லியிருக்கான். எல்லாத்துக்கு முன்னாடி குடும்பமே ரூமுக்குள்ள போயி பூட்டிக்கிட்டா நல்லாவா இருக்கும்”

“இருந்தாலும் உள்ள போனேம்ல. சும்மா நாச்சிக்கும் அழுதுக்கிட்டே இருக்கான். அவன் அம்மே புள்ளைக்கு பசிக்குதோன்னு சோறு கொண்டாறேன்னு போச்சிலே. திரும்ப திரும்ப ஓங்கி ஓங்கி அழுதாம்லே. எனக்கு கோவம் வந்திருச்சிவே. அவனை பிடிச்சி குண்டியில ரெண்டு அறை வுட்டேன். என்னடா! அப்பன் காரன் தீடீர்ன்னு அடிக்கான்னு அழுகைய நிப்பாட்டிட்டு என்னையே பார்த்தான். நானும் அவனையே பார்த்துட்டு இருந்தேனா திரும்ப அழுக ஆரம்பிச்சிட்டான்வே”

“அவன் அம்மே சோத்த கொண்டு ரூமுக்குள்ளாற வந்திச்சா ஓடிப்போயி அவன் அம்மய பிடிச்சிக்கிட்டு அப்பா அடிக்காருன்னு சொன்னான்வே. என் பொண்டாட்டி எம் மூஞ்சே பார்த்தா.. நான் உண்மைய சொன்ன புள்ளய அடிக்காதீங்கன்னு திட்டுவா… எனக்கு வேற பயமா இருந்திச்சி. நான் அவனை கடவுள் சத்தியமா அடிக்கவேயில்லன்னு சொல்லிட்டேம்ல”

“பொண்டாட்டிக்கு வந்திச்சே கோபம்.பையன பிடிச்சி பொய்யா சொல்றே பொய்யா சொல்றேன்னு திரும்ப அவன் குண்டியில நாலு சாத்து சாத்துனா. பையன் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டான். எனக்கு ஒரு மாதிரி போயிடிச்சி தெரியுமாலே. எதுக்குடா என்னையறியாம இந்த பொய் வந்திச்சோன்னு ஆகிப்போச்சிடே”

“தேம்பி தேம்பி அழுதுக்கிட்டே அவன் தூங்கிட்டான். அப்பறம் வந்தவங்களை எல்லாம் அனுப்புனுமில்ல. அனுப்பிச்சிட்டு தூங்குன எனக்கு தாம்ல தூக்கம் வரல. சே! என்னயிருந்தாலும் அவன் பச்ச மண்ணுவே…”

Advertisements

~ by ajinomotto மேல் செப்ரெம்பர் 10, 2008.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: